சங்கரன்கோவில்: உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு போஸ்டரால் பரபரப்பு

சங்கரன்கோவில்: உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு போஸ்டரால் பரபரப்பு
X
சங்கரன்கோவில் அருகே பட்டாடை கட்டி கிராம மக்கள் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக போஸ்டர் அடித்து ஒட்டியதால் பரபரப்பு.

சங்கரன்கோவில் அருகே உள்ள பட்டாடை கட்டி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக போஸ்டர் அடித்து ஒட்டியதால் பரபரப்பு.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட பட்டாடை கட்டி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். தங்கள் ஊரில் நீண்ட நாட்களாக இருந்து வரும் குடிநீர் பிரச்சனை, நியாய விலை கடை சீர் அமைக்காதது குளத்தை தூர்வாராது, பஞ்சாயத்து அதிகாரிகளை இடமாற்றம் செய்வது, உள்ளிட்ட பிரச்சினைகளை காரணம் காட்டி உள்ளாாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் தங்கள் ஊருக்குள் வாக்கு சேகரித்து வர யாரையும் அனுமதிக்க போவதில்லை எனவும் தெரிவித்து உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!