தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கல்லூரி மாணவர்கள் போராட்டம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கல்லூரி மாணவர்கள் போராட்டம்
X

சங்கரன் கோவில் அருகே கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தனியார் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலித நல்லூர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த 17. 2 .21ம் தேதி கல்லூரி முதல்வர் ஹரி கெங்காராம் தன்னை கல்லுரி மாணவர்கள் சிலர் தாக்கியதாக போலீசில் புகார் செய்தார்.

இந்த புகாரின் பேரில் பனவடலிசத்திரம் காவல்துறையினர் வேதியியல் துறை பேராசிரியர் சிவக்குமார், மாணவர்கள் உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் போலீஸ் வழக்கு பதிவை ரத்து செய்யகோரியும், வழக்கு பதிவு செய்யப்பட்ட மாணவர்களை கல்லூரிக்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரியும் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயில் முன்பு 400 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!