சங்கரன்கோவிலில் நகர்மன்ற தேர்தலையொட்டி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் நகர தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.
தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.இதில் தி.மு.க. 100 சதவீத வெற்றியை பெற்று வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளது. இதைத்தொடர்ந்து நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இன்று நகர் மன்ற தேர்தல் சம்பந்தமான தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்தக் கூட்டத்திற்கு நகர கழக செயலாளர் சங்கரன் தலைமை தாங்கினார்.மேலும்சட்டமன்ற உறுப்பினர்வழக்கறிஞர் ஈ. ராஜா,முன்னாள் அமைச்சர் ச.தங்கவேலு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்து நகர்மன்ற தேர்தல் சம்பந்தமான ஆலோசனைகளை வழங்கினார்.
கூட்டத்தில தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவ பத்மநாதன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் பேசிய மாவட்ட கழக செயலாளர் 'வருகின்ற நகர்மன்ற தேர்தலில் கழகத்திற்காக உழைத்த தொண்டர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும்.சங்கரன்கோவில் நகரத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தி.மு.க. முழு வெற்றி பெறும்.திமுக நகர் மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளையும் தி.மு.க. முழுமையாக கைப்பற்றும். தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தான் சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சங்கரன்கோவில் நகரில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. மக்கள் தி.மு.க. விற்கு வாக்களிக்க தயாராக உள்ளனர் என்றார்.
மேலும் சங்கரன்கோவில் நகரத்தைச் சேர்ந்த மாற்று கட்சியினர் 30 பேர் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர்பொ.சிவபத்மநாதன். முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.இந்தக் கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள்,மாவட்ட அணி நிர்வாகிகள்,நகர கழக நிர்வாகிகள் ,வார்டு செயலாளர்கள் ,பிரதிநிதிகள் மற்றும் கழக முன்னணியினர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu