மதுரை - செங்கோட்டை பயணிகள் ரயிலை சங்கரன்கோவில் வழியாக இயக்க கோரிக்கை

மதுரை - செங்கோட்டை பயணிகள் ரயிலை சங்கரன்கோவில் வழியாக இயக்க கோரிக்கை
X
மதுரை - செங்கோட்டை செல்லும் பயணிகள் ரயிலை இயக்க சங்கரன்கோவில் வழியாக இயக்க, அப்பகுதி பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

கொரோனா ஊரடங்கிற்கு முன்பு, செங்கோட்டை முதல் மதுரை செல்லும் பயணிகள் ரயிலானது, சங்கரன்கோவில் வழியாக காலை, நண்பகல், மாலை, இரவு ஆகிய நான்கு நேரங்களில் இயக்கப்பட்டு வந்தன. கொரோனா ஊரடங்களில் தளர்வுகள் அளித்தும் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக, பயணிகள் ரயில் சங்கரன்கோவில் வழியாக இயக்கப்படவிலலி.

இதனால், சங்கரன்கோவிலில் இருந்து மதுரை, இராஜபாளையம், செங்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வேலை உள்ளிட்ட பல்வேறு அத்தியவாசிய தேவைகளுக்கு, விரைவாக பேருந்தில் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. எனவே தெற்கு ரயில்வே நிர்வாகம், மதுரை - செங்கோட்டை ரயிலை, மீண்டும் பழையபடி சங்கரன்கோவில் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பயணிகள் மற்றும் பொதமக்களின் கோரிக்கையாகும்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!