சங்கரன்கோவில் : அடிப்படை வசதிகள் வேண்டி அதிமுகவினர் கோரிக்கை

சங்கரன்கோவில் : அடிப்படை வசதிகள் வேண்டி அதிமுகவினர்  கோரிக்கை
X

சங்கரன்கோவிலில் அதிமுக சார்பில் 300க்கும் மேற்பட்டோர் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.

சங்கரன்கோவிலில் அடிப்படை வசதிகளை செய்துதர கோரி அதிமுக சார்பில் 300க்கும் மேற்பட்டோர் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.

சங்கரன்கோவில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர கோரி அதிமுக சார்பில் 300க்கும் மேற்பட்டோர் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்குட்பட்ட 30 வார்டுகளில் குடிநீர், சாலைவசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் அதிமுக முன்னாள் நகர்மன்றத் தலைவர் கண்ணன் தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் இன்று ஊர்வலமாகச் சென்று நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர். தற்போது மழைக்காலம் என்பதால் தண்ணீர் குழாயில் அடைப்பு இருப்பதால் அதை சரி செய்து பொதுமக்களுக்கு விரைந்து குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

Tags

Next Story
கோபி பழைய ஆஸ்பத்திரி வீதியில் குண்டும் குழியுமான சாலையில்  மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதி!