சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
X
சங்கரன் கோவில் சங்கர நாராயணசுவாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற சங்கரநாராயணசுவாமி கோவில் உள்ளது. இங்கு மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.இதையொட்டி நேற்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு சயன நாராயணருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.பின்னர் கோவில் உள்பிரகாரத்தில் வீதியுலா வந்த பள்ளிக்கொண்டபெருமாள் வடக்குமாடவீதியில் உள்ள சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதையடுத்து ரதவீதி வழியாக வீதியுலா வர வேண்டிய சாமி கொரோனா தொற்று காரணமாக உள்பிரகாரத்தில் வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர்.

Tags

Next Story