ஊரடங்கை முன்னிட்டு அதிக விலைக்கு விற்பனை

ஊரடங்கை முன்னிட்டு அதிக விலைக்கு விற்பனை
X
சங்கரன்கோவிலில் பொதுமக்கள் அதிர்ச்சி.

சங்கரன்கோவில் மளிகை கடை காய்கறி கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் கடும் விலை உயர்வு பொதுமக்கள் அதிர்ச்சி.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர் பகுதிகளில் செயல்பட்டு வரும் மளிகை கடை காய்கறி கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் திடீரென விலை கடுமையான உயர்ந்து உள்ளதால் நடுத்தர மக்கள் ஏழை எளிய மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று முதல் தமிழகத்தில் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல் இருப்பதையொட்டி நேற்று ஒரு நாள் மட்டும் மளிகை காய்கறி கடைகள் செயல்பட்டது..

மக்கள் அத்தியாவசிய தேவைக்காக கடைகளை நோக்கி வரும் நிலையில் இதனை வியாபாரிகள் பயன்படுத்தி நேற்று வரை கடலை எண்ணெய் லிட்டர் 190 ரூபாய் இருந்த நிலையில் 250 ரூபாய்க்கும் பூண்டு கிலோ 180 ரூபாய் விற்கபட்ட நிலையில் 200 ரூபாய்க்கும் 80 ரூபாய்க்கு விற்கபட்ட கேரட் 120 ரூபாய்க்கு விற்பனை செய்தனர். இதனால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!