சங்கரன்கோவில் அருகே 35 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசுமாடு பத்திரமாக மீட்பு

சங்கரன்கோவில் அருகே 35 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசுமாடு பத்திரமாக மீட்பு
X

கிணற்றிலிருந்து பசுமாட்டை மீட்கும் தீயணைப்புத்துறையினர்.

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்த பசு மாட்டை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டு மேலே கொண்டுவந்தனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள பலபத்திரராமபுரம் கிராமம் கீழத் தெருவை சார்ந்த முத்துச்சாமி. இவருடைக்கு சொந்தமான காலனி வீட்டு கீழ்புறம் 35 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாமல் உள்ளது. இந்த கிணற்றில் சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள அவரின் பசுமாடு தவறி விழுந்தது.

இதனையடுத்து, சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகலையடுத்து, தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவின் அலுவலர் விஜயன் தலைமையில் வீரர்கள் கிணற்றில் இறங்கி பசு மாட்டை மீட்டு கிணற்றின் மேலே பத்திரமாக கொண்டுவந்தனர். பின்னர், மாட்டின் உரிமையாளர் முத்துச்சாமியிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags

Next Story