ஊரக உள்ளாட்சி தேர்தல்: சங்கரன்கோவிலில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

சங்கரன்கோவில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக தென்காசி, செங்கோட்டை, குருவிகுளம், கடையநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் ஆகிய ஐந்து யூனியன்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு பதட்டமான பகுதிகள் மற்றும் வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இல்லாமல் பாதுகாப்பாக இருப்பதை உணர்த்தும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS அவர்களின் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோரின் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் ஆகியோர் கலந்து கொண்ட கொடி அணிவகுப்பு நடைபெற்று வருகிறது.

இதேபோல் சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆண்டார்குளம் இருமன்குளம் போன்ற பகுதிகளில் காவல் ஆய்வாளர் திரு.மீனாட்சி நாதன் அவர்களின் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

Tags

Next Story
ai in future agriculture