சங்கரன்கோவில் அருகே ரவுடி ஜான் பாண்டியன் வெட்டி படுகொலை - பரபரப்பு

சங்கரன்கோவில் அருகே ரவுடி ஜான் பாண்டியன் வெட்டி படுகொலை - பரபரப்பு
X

ரவுடி ஜான் பாண்டியன்

சங்கரன்கோவில் அருகே வெள்ள கவுண்டன்பட்டியை சேர்ந்த உள்ளூர் பிரபல ரவுடி ஜான் பாண்டியன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

சங்கரன்கோவில் அருகே வெள்ளகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் ஜான்பாண்டியன், ரவுடி. இவர் மீது சின்னகோவிலாங்குளம் காவல்நிலையத்தில் 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் சின்ன கோவிலாங்குளம் காவல்நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் வெள்ளகவுண்டம்பட்டி சென்று பார்த்தனர். அப்போது, உள்ளூர் ரவுடி ஜான்பாண்டியன் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது

குடிபோதையில் ஜான்பாண்டியனுக்கும், அவரது உறவினர் பாண்டி மகன் அந்தோனி ராஜ்க்கும் இடையே, நேற்றிரவு குடிபோதையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், ஏற்பட்ட மோதலில் அந்தோனி ராஜ், ஜான்பாண்டியனை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ஜான்பாண்டியன், சம்பவ இடத்திலேயே பலியானார். அந்தோணிராஜ்யை சின்ன கோவிலாங்குளம் போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!