சங்கரன்கோவிலில் ரவுடிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் பிரபல ரவுடி வெட்டி கொலை

சங்கரன்கோவிலில் ரவுடிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் பிரபல ரவுடி வெட்டி கொலை
X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கண்டிகை பேரி கிராமத்தைச் சேர்ந்த முத்து பாண்டி என்பவர் கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு மரியராஜ் என்பவரை வழக்கு சம்பந்தமாக மிரட்டுவதற்காக சென்ற முத்துப்பாண்டியை மரியா ராஜ் விரட்டி விரட்டி அரிவாளால் வெட்டியுள்ளா

சங்கரன்கோவில் அருகே ரவுடிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது .

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள கண்டிகை பேரி கிராமத்தைச் சேர்ந்த முத்து பாண்டி என்பவர் கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு மரியராஜ் என்பவரை வழக்கு சம்பந்தமாக மிரட்டுவதற்காக சென்ற முத்துப்பாண்டியை மரியராஜ் விரட்டி விரட்டி அரிவாளால் வெட்டியுள்ளார்.

சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த முத்துப்பாண்டி உடலை மீட்ட சங்கரன்கோவில் தாலுகா காவல் துறையினர், அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். வெட்டி படுகொலை செய்த மரியாஜ் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இருவரும் கொலை வழக்கு உட்பட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. காவல்துறையினர் இது குறித்து மேலும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business