சங்கரன்கோவில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் சாலை மறியல் போராட்டம்

சங்கரன்கோவில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் சாலை மறியல் போராட்டம்
X

சங்கரன் கோவிலில் துப்புரவு பணியாளர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

சங்கரன்கோவில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஊதியம் வழங்க கோரி சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் உள்ள குப்பைகளை தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு துப்புரவு பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

கடந்த மூன்று மாதங்களாக ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. ஊதியம் வழங்க வேண்டும் எனவும், விடுபட்ட அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் எனவும் சங்கரன்கோவில் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் இன்று திடீரென சங்கரன்கோவில் ராஜபாளையம் பிரதான சாலையில் துப்புரவு பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திடீரென நடந்த இந்த சாலை மறியலால் காலையில் அலுவலகம் செல்பவர்கள் பள்ளிகளுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் கனரக வாகனங்கள் எந்த இடத்திற்கும் செல்ல முடியாத அளவிற்கு வாகன நெரிசல் ஏற்பட்டது.

சாலையின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுபற்றிய தகவல் அறிந்ததும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. தொடர்ந்து பல முறை கோரிக்கை வைக்கும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் நகராட்சி நிர்வாகம் உள்ளது என்று ஒப்பந்த பணியாளர்கள் கூறிய போது காவல்துறையினர் தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். அவர்கள் இன்னும் சில நாட்களில் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப் போவதாக உறுதி அளித்து உள்ளனர். ஆதலால் போராட்டத்தை கைவிடுங்கள் என கூறினார்கள்.

இதனை தொடர்ந்து அரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து பணியாளர்கள் கலைந்து சென்றனர்.

Tags

Next Story
மட்டன் சாப்டும்போது இந்த உணவுகளை மட்டும் சேர்த்து சாப்டாதீங்க.. உயிருக்கே ஆபத்தாகலாம்..!