ஆபத்தான நிலையில் உண்டு உறைவிடப்பள்ளி: புதிய கட்டிடம் அமைக்க கோரிக்கை

ஆபத்தான நிலையில் உண்டு உறைவிடப்பள்ளி: புதிய கட்டிடம் அமைக்க கோரிக்கை
X

தலையணை பகுதியில், சிதிலமடைந்துள்ள அரசு பழங்குடியின உண்டு உறைவிடப்பள்ளி. 

சங்கரன்கோவில் அருகே, இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியை இடித்து, புதியதாக கட்ட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தலையணை பகுதியில், 50க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடியிருப்பு அருகிலேயே மலைவாழ் மக்களின் குழந்தைகள் படிப்பதற்கு அரசு பழங்குடியின உண்டு உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியின் கட்டிடம், உரிய பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ளது. இது, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான சூழ்நிலையில் உள்ளது. தமிழகத்தில் அடுத்த மாதம் முதல், ஒன்றாம் வகுப்பு பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. எனவே இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியின் கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் அமைத்து தர வேண்டும்; மாணவர்களின் உயிர் சார்ந்த விஷயம் என்பதால், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மலைவாழ் மக்களின் கோரிக்கையாகும்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!