சங்கரன்கோவில் அருகே 75அடி ஆழ கிணற்றில் விழுந்த மூன்று மயில் குஞ்சுகள் மீட்பு

சங்கரன்கோவில் அருகே 75அடி ஆழ கிணற்றில் விழுந்த மூன்று மயில் குஞ்சுகள் மீட்பு
X

மூன்று மயில் குஞ்சுகளை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறையினர்.

சங்கரன்கோவில் அருகே 75அடி ஆழ கிணற்றில் விழுந்த மூன்று மயில் குஞ்சுகளை தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டனர்.

சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரது 75 அடி ஆழ கிணற்றில் கிணற்று மூன்று மயில் குஞ்சுகள் விழுந்து நீரில் தத்தளித்துக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

இதனையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், மாவட்ட அலுவலர் கவிதா உத்தரவுப்படி நிலைய அலுவலர் விஜயன் தலைமையில் குழுவினர் விரைந்து சென்று தீயணைப்பு ராஜேந்திரன் லாவகமாக கிணற்றில் இறங்கி மூன்று மைல் குஞ்சுகளையும் மீட்டார்.

பின்னர் அந்த மயில் குச்சுகளை காட்டுப் பகுதியில் விட்டு, தாய் மயிலுடன் சேர்த்து வைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!