குடியரசு தினம்: நாகலாபுரம் அரசு கல்லூரியில் சுதந்திர போராட்ட தியாகிகள் ரத ஊர்வலம்

குடியரசு தினம்: நாகலாபுரம் அரசு கல்லூரியில் சுதந்திர போராட்ட தியாகிகள் ரத ஊர்வலம்
X

நாகலாபுரம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகள் ரத ஊர்வலம் தொடங்கப்பட்டது.

கோவில்பட்டி, நாகலாபுரம் அரசு கலை கல்லூரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகள் ரத ஊர்வலம்.

73 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாகலாபுரம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகள் ரத ஊர்வலம்

நாட்டின் 73 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாகலாபுரம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகள் ரத ஊர்வலம் தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் இரா. சாந்தகுமாரி தலைமை வகித்தார். விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திரப் போராட்ட தியாகிகள் ரத ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ரத ஊர்வலத்தில் சுதந்திர போராட்ட தியாகிகள் வ.உ.சிதம்பரனார், மகாகவி சுப்பிரமணிய பாரதியார், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகுமுத்துக்கோன், வீரன் சுந்தரலிங்கம், மதுரகவி பாஸ்கரதாஸ், வாஞ்சிநாதன், சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட தலைவர்கள் உருவப்படங்கள் இடம்பெற்றிருந்தன.

தியாகிகள் ரத ஊர்வலம் விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட நாகலாபுரம் கரிசல்குளம் விளாத்திகுளம் பிள்ளையார்நத்தம் படர்ந்தபுளி எட்டயபுரம் தாப்பாத்தி தாப்பாத்தி முகம் மேலக்கரந்தை கீழக்கரந்தை ரகுராமபுரம் வவ்வால் தொத்தி புதுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்றன. அங்கு சுதந்திர போராட்ட தியாகிகள் வரலாறு குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகித்தும் கலை நிகழ்ச்சிகள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags

Next Story