இயற்கை விவசாயம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு செய்முறை பயிற்சி

இயற்கை விவசாயம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு செய்முறை பயிற்சி
X

வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் இயற்கை முறை விவசாயபணிகள் குறித்து செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் இயற்கை முறை விவசாயபணிகள் குறித்து செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அடுத்த வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் இயற்கை முறையில் நெல் சாகுபடி மற்றும் அதற்கான இயற்கை உரங்களின் வகைகள் மற்றும் பயன்பாடு குறித்த செய்முறை பயிற்சியினை பள்ளி மாணவ மாணவிகளுக்கு களக்காடு வேளாண்மை உதவி தொழில் நுட்ப மேலாளர் திரிசூலம் விளக்கமளித்தார்.

இதில் மாணவ மாணவியர் பள்ளி வளாகத்தில் உள்ள விளைநிலத்தில் முற்றிலும் இயற்கை உரங்களை பயன் படுத்தி நாற்று நடும் பணிகளை துவங்கினர்.

இந்நிகழ்ச்சியினை பள்ளி தலைவர் கிரகாம்பெல் துவக்கி வைத்தார்.பள்ளித் தாளாளர் திவாகரன் , மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி முதல்வர் சுடலையாண்டி , சிபிஎஸ்சி.பள்ளி முதல்வர் முருகன் நிர்வாக அலுவலர் பிந்துஜா உள்ளிட்ட ஆசிரியர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil