சங்கரன்காேவிலில் சூரிய பகவான் வழிபடும் அரிய நிகழ்வு: பக்தர்கள் ஏமாற்றம்

சங்கரன்காேவிலில் சூரிய பகவான் வழிபடும் அரிய நிகழ்வு: பக்தர்கள் ஏமாற்றம்
X
சங்கர நாராயானைரை சூரிய பகவான் வழிபடும் அரிய நிகழ்வு மரக்கிளைகள் தடையால் நடைபெறாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சங்கரன்கோவில் சங்கர நாராயானைரை சூரிய பகவான் வழிபடும் நிகழ்வு மரக்கிளைகள் தடையால் சூரிய பகவான் வழிபடும் காட்சி பக்தர்களுக்கு கிடைக்காததால் மிகுந்த ஏமாற்றம்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயணர் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோயில் ஆகும். இத்திருக்கோயிலின் கட்டிட அமைப்பு வருடத்தில் இரண்டு முறை மார்ச் செப்டம்பர் மாதத்தில் மூன்று நாட்கள் 21,21,23 தேதிகளில் சூரிய பகவான் அதிகாலையில் எழுந்தருளி நாராயானைரை தரிசிக்கும் அரிய நிகழ்வு நடைபெறும்.

இதனை கான வெளியூர் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் இன்று சூரிய பகவான் எழுந்தருளி சிவபெருமானை தரிசிக்கும் நிகழ்வு நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில் கோவில் நிர்வாகத்தின் அலட்சியத்தால் முன் பகுதியில் உள்ள மரக்கிளைகள் வெட்படாமல் இருந்ததால் மறைக்கப்பட்டு சூரிய பகவான் வழிபடும் நிகழ்வு நடைபெறாததால் பக்தர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Tags

Next Story
ai as the future