ராதாபுரம்: சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலக திறப்பு விழா

ராதாபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலக திறப்பு விழா
ராதாபுரத்தில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தை தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தலைமையில் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் திறந்து வைத்தார்.
ராதாபுரத்தில் அமைந்துள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி இருந்த நிலையில், தற்போது புதுப்பிக்கப்பட்டு பொதுமக்களின் நலன்கருதி ராதாபுரம் வடக்கு பகுதி மெயின்ரோட்டில் அமைந்துள்ள அலுவலகத்தை நேற்று காலை தமிழக சட்டபேரவை சபாநாயகரும் தொகுதி உறுப்பினருமான மு.அப்பாவு தலைமையில், நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அங்கிருந்த கணிணியை இயக்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை வாங்கினார். அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு இருவரும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.பின்னர் பொதுமக்களிடம் பேசிய அப்பாவு இந்த தொகுதி அலுவலகத்தை அனைத்து தரப்பு பொதுமக்களும் தங்களுடைய தேவைகளை மனுவாக சட்டமன்ற அலுவலகத்தில் கொடுத்து விட்டு செல்லலாம் எனக் கூறினார். இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வீ.எஸ் ஆர் .ஜெகதீஸ் மாவட்ட கவுன்சிலர்கள் பாஸ்கர் லிங்கசாந்தி ஒன்றிய கவுன்சிலர் ஜான்ஸ்ரூபா வள்ளியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயன் வள்ளியூர் பேரூர் திமுக செயலாளர் சேதுராமலிங்கம் பணகுடி வீ.டி.தமிழ்வாணன் திசையன்விளை ஜான்கென்னடி ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி உள்ளிட்ட பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu