காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
பட விளக்கம்: காங்கிரஸ் கட்சி சார்பில் சேர்ந்த மரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
தென்காசியில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு நிதியை வழங்காமல் முடக்கும் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் நிதியை கணிசமாகக் குறைக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் முன் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்து சேர்ந்த மரம் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு தென்காசி சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் தென்காசி மாவட்ட தலைவருமான பழனி நாடார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை ஒதுக்க வேண்டும் எனவும், வருடத்தில் 100 நாள் வேலை என்பதை 150 நாளாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுரண்டை நகர்மன்ற தலைவர் வள்ளி முருகன், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் உதயகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் ஆலங்குளம் செல்வராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் சந்தோஷ், நகர தலைவர்கள் மாடசாமி ஜோதிடர், ஜெயபால், நகரப் பொருளாளர் ஈஸ்வரன் உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu