சங்கரன்கோவிலில் தடையை மீறி பிரசாரம்: திமுக, அதிமுகவினரிடையே வாக்குவாதம்

சங்கரன்கோவிலில் தடையை மீறி பிரசாரம்: திமுக, அதிமுகவினரிடையே வாக்குவாதம்
X

சங்கரன்கோவிலில் திமுக வேட்பாளர் கனேசனுக்கு ஆதரவாக திமுக முன்னாள் அமைச்சர் தங்கவேலு  பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் பரப்புரை முடிந்த நிலையில் இன்று திமுக முன்னாள் அமைச்சர் பிராச்சாரத்தில் ஈடுபட்டதால் அதிமுக-திமுகவினரிடையே வாக்குவாதம்.

தேர்தல் பரப்புரை நேற்றே முடிந்த நிலையில் இன்று திமுக முன்னாள் அமைச்சர் தங்கவேலு வீடு வீடாக சென்று பிராச்சாரத்தில் ஈடுபட்டதால் அதிமுக-திமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு.

நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில் இன்று தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிகுக்குட்பட்ட இரண்டாவது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனேசனுக்கு ஆதரவாக திமுக முன்னாள் அமைச்சர் தங்கவேலு வீடு வீடாக சென்று தேர்தல் பிரச்சாரம் செய்ததால் அதே வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் ராமதுரைக்கும் திமுகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. பின்னர் திமுக முன்னாள் அமைச்சர் தங்கவேலு அந்த இடத்தை விட்டு சென்று விட்டார்.

ஏற்கனவே இந்த வாக்குசாவடி மையம் பதட்டமான வாக்குசாவடி மையம் என்பதால் நாளை அதிகளவு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ள நிலையில் தற்போது திமுக அதிமுகவினரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் பரபரப்பு.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது