சங்கரன்கோவில் அருகே கணவருடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி கர்ப்பிணி பெண் போராட்டம்

சங்கரன்கோவில் அருகே கணவருடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி கர்ப்பிணி பெண் போராட்டம்
X

சங்கரன்கோவில் அருகே தனது கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி வீட்டில் வாசல் முன்பு அமர்ந்து 9 மாத கர்ப்பிணி பெண் போராட்டம் நடத்தினார்.

சங்கரன்கோவில் அருகே தனது கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி வீட்டில் வாசல் முன்பு அமர்ந்து 9 மாத கர்ப்பிணி பெண் போராட்டம்.

சங்கரன்கோவில் அருகே தனது கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி வீட்டில் வாசல் முன்பு அமர்ந்து 9 மாத கர்ப்பிணி பெண் போராட்டம்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரும்பத்தூர் பகுதியைச் சேர்ந்த பாரதிராம்(36) என்பவருக்கும் அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஆதிலட்சுமி(32) என்பவருக்கும் திருமணமாகி 7 வயதில் 1 ஆண் குழந்தையும் 9 மாத கர்ப்பிணியாகவும் இருந்து வருகிறார். தனது கணவர் அவரது அண்ணன் பேச்சை கேட்டு கொண்டு தன்னுடன் வாழ மறுப்பதாகவும், தன்னை கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி கணவர் இல்லம் முன்பு பெட்ரோல்கேனுடன் தர்ணா போராட்டம் நடத்தினார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கரிவலம்வந்தநல்லூர் காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து கர்ப்பிணி பெண் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவிட்டு கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்திற்கு சென்றார்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare