பூலித்தேவன் பிறந்த நாள் விழா: சங்கரன்காேவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பூலித்தேவன் பிறந்த நாள் விழா: சங்கரன்காேவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
X
சங்கரன்கோவில் அருகே நாளை முதல் பூலித்தேவன் பிறந்த நாளையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை தென் மண்டல ஐஜி அன்புநேரில் ஆய்வு.

சங்கரன்கோவில் அருகே நாளை, முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர் மன்னர் பூலித்தேவர் பிறந்த நாளையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென் மண்டல காவல்துறைத் தலைவர் நேரில் ஆய்வு செய்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெற்கட்டும் செவல் கிராமத்தில் முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மன்னர் பூலித்தேவரின் 306 வது பிறந்தநாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது.

இதையாெட்டி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களை சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென் மண்டல ஐஜி அன்பு, நெல்லை ஐஜி பிரவீன்குமார் அபிநபு, மாவட்ட எஸ்பி கிருஷ்ணராஜ், தலைமையிலான காவல்துறையினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

Tags

Next Story