சங்கரன்கோவில் அருகே பூலித்தேவன் பிறந்த நாள் விழா: வாரிசுகள் மலர் தூவி மரியாதை

சங்கரன்கோவில் அருகே பூலித்தேவன் பிறந்த நாள் விழா: வாரிசுகள் மலர் தூவி மரியாதை
X
சங்கரன்கோவில் அருகே பூலித்தேவனின் 306 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது வாரிசுகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

சங்கரன்கோவில் அருகே முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவனின் 306 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது வாரிசுகளான ராணி கோமதி முத்துராணி துரைச்சி மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 2500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெல்கட்டும்செவல் கிராமத்தில் முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் புலித்தேவரின் 306 வது பிறந்த நாள் விழா இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையொட்டி பூலித்தேவரின் நேரடி வாரிசுதாரர்கள் ராணி கோமதி, ராணி முத்து, ராணி துரைச்சி ஆகியாேர் பூலிதேவரின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பூலித்தேவரின் பிறந்தநாளையொட்டி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, மதுரை உட்பட 11 மாவட்டங்களை சேர்ந்த 2,500 காவல்துறையினர் 20 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story