காவல் கிணறு அருகே பா.ஜ.க. சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு

காவல் கிணறு அருகே பா.ஜ.க. சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு
X

காவல் கிணறு அருகே பா.ஜ.க. சார்பில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் காவல் கிணறு அருகே ஆவரைக்குளத்தில் பா.ஜ.க. சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் காவல் கிணறு அருகே ஆவரைக்குளத்தில் பா.ஜ.க. சார்பில் தமிழகத்திற்கு மருத்துவ கல்லூரி தந்த பாரத பிரதமர் மோடிக்கு பாராட்டு விழாவும் மற்றும்தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பும் வழங்கப்பட்டன.

தமிழகத்திற்கு 11 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைத்தமைக்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு விழாவும் பொங்கல் விழாவினை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது.

மாவட்ட ஒ.பி.சி. மோர்ச்சா துணைத் தலைவர் நரேந்திர ரானடே பாலாஜி , மற்றும் சிறப்பு அழைப்பாளர் நிமிதா சுரேஷ் இருவரும் வழங்கினர். ஆவரைக்குளம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 500 ஏழை பெண்களுக்கு இலவச சேலைகள் மற்றும் கரும்புகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஆவரைக்குளம் பஞ்சாயத்து தலைவர் சிவபார் சே அழகு , துணைத்தலைவர் அசோக் , மாவட்ட துணைத்தலைவர் அருள் காந்தி , மாவட்ட கல்வி பிரிவு செயலாளர் ரகு , மாவட்ட விவசாய அணி முத்து கிருஷ்ணன் , கிளைத்தலைவர் சுரேஷ் துரை , ஆவரைக்குளம் விஜயன் ,சிவக்குமார் ,கிருஷ்ணன் , செந்தில் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!