வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்
X
பொங்கல் விழாவில் பங்கேற்ற மாணவர்களுடன் ஆசிரியர்கள்.
தென்காசி மாவட்டம் வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி மாவட்டம் வடக்கன்குளம் சகாயத் தாய் கலைக்கல்லூரி மற்றும் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு கல்லூரி மற்றும் பள்ளிகளில் தலைவர் கிரகாம்பெல் தலைமை வகித்தார். தாளாளர் திவாகரன் முன்னிலை வகித்தார். பள்ளிகளின் முதல்வர் கிருஷ்ணவேணி வரவேற்றார்.

விழாவையொட்டி கோலப் போட்டிகள். சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், கிராமிய நடனம் போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

விழாவில் பங்கு பெற்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கல்வி குழும உறுப்பினர்கள், ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business