கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்
X

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாக தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தென்காசி மாவட்ட எஸ்பி., சுகுணா சிங் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் போலீசாரால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் பனவடலிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி அப்பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் மற்றும் மாஸ்க்குகள் வழங்கி கொரோனா தொற்றின் பாதிப்பு குறித்து விளக்கினார்.

மேலும் பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்காக வெளியே வரும்போது கண்டிப்பாக மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும், கொரோனா தொற்றின் 2 ம் அலை வேகமாக பரவி வருவதால் மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டு எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil