கரிவலம்வந்தநல்லூர் அருகே தந்தையை "களை கொத்தியால்" வெட்டிய மகனுக்கு போலீஸ் வலைவீச்சு

கரிவலம்வந்தநல்லூர் அருகே தந்தையை களை கொத்தியால் வெட்டிய மகனுக்கு போலீஸ் வலைவீச்சு
X
கரிவலம்வந்தநல்லூர் அருகே தந்தையை "களை கொத்தியால் "வெட்டிய மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

கரிவலம்வந்தநல்லூர் அருகே தந்தையை "களை கொத்தியால் " வெட்டிய மகனுக்கு போலீஸ் வலைவீச்சு

தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள காரி சாத்தான் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகசாமி (61) இவரது மனைவி வீரம்மாள். இவர்களது மகன் மாரிச்சாமி கடையநல்லூர் அருகே உள்ள மாவடிகால் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீரம்மாள் இறந்து போனார். அதற்கான விஷேசம் நேற்று முன்தினம் நடந்தது.

அந்த விஷேசத்திற்கு வந்த மாரிச்சாமி சொத்து பிரச்சனையில் மாரிச்சாமி, தனது தந்தை சண்முகச்சாமியை விவசாயத்திற்கு களை எடுக்கப் பயன்படும் "களை கொத்தி" கருவியால் தலையில் தாக்கினார். இதில் காயமடைந்த சண்முகச்சாமி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்த புகாரின்பேரில் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் மாரிச்சாமியை தேடி வருகின்றனர்

Tags

Next Story
கல்லூரி கனவு நிகழ்ச்சி - மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல்