உவரியில் ஓரேநாளில் கொள்ளையர்களை பிடித்த போலீசார்: ரூ 50 லட்சம் மீட்பு

உவரியில் கொள்ளை நடந்த 24 மணி நேரத்தில் கொள்ளையர்களை கண்டுப்பிடித்த தனிப்படை போலீசாரை போலீஸ் எஸ்பி பாராட்டினார்.
உவரி அருகே இடையன்குடி பழைய கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆம்ஸ்டர் சைலஸ் (34). நேற்று முன்தினம் இவரது வீட்டிற்குள் மர்மநபர்கள் புகுந்து 51 பவுன் தங்க நகைகள் ரொக்க பணம் 33ஆயிரத்தை திருடி சென்றுள்ளனர்.
இத்திருட்டு சம்பவம் குறித்து உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில். திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப. சரவணன் உத்தரவு படி வள்ளியூர் உதவி காவல் கண்காணிப்பாளர் சமய்சிங்மீனா மேற்பார்வையில் உவரி காவல் ஆய்வாளர் செல்வி தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து பார்த்து சந்தேகத்தின் அடிப்படையில் தென்காசி மாவட்டம், தட்டான்பட்டியை சேர்ந்த ஆபிரகாம் என்பவரது மகன்கள் பெஞ்சமின் (33) ஈசாக்(31), மற்றும் பெஞ்சமின் மனைவி காளீஸ்வரி(31) ஆகியோரை பிடித்து விசாரணை செய்ததன் அடிப்படையில் அவர்களிடமிருந்து 51 பவுன் நகைகள், பணம் ரூ.33,000/-, செல்போன் -5, வாட்ச்-1, மினிடெம்போ 1, கார்கள் 2 டிராக்டர்1, மற்றும் டூவீலர்கள் 3 ஆகியவைகளை பறிமுதல் செய்தனர்.
இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து 24 மணி நேரத்திற்குள் விரைந்து கைது செய்த உவரி காவல் ஆய்வாளர் செல்வி தலைமையிலான தலைமை காவலர் செல்வகுமார், முதல் நிலை காவலர்கள் சதீஸ்குமார் மற்றும் தங்கராஜ் காவலர்கள் கேஸ்டர் ரொனோல்டோ, கிருஷ்ணகுமார், மற்றும் வள்ளியூர் உட்கோட்ட தனிப்படை போலீசாரை கண்காணிப்பாளர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu