பல்வேறு காேரிக்கைகளை வலியுறுத்தி மாெட்டை பாேடும் தாெழிலாளர்கள் மனு

சங்கரன்காேவிலில் மொட்டை போடும் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் பொ.சிவ பத்மநாதனிடம் மனு.
சங்கரன்கோவில் திரு சங்கர நாராயண சுவாமி திருக்கோவிலில் மொட்டை போடும் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி திமுக தெற்கு மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவ பத்மநாதன் கோரிக்கை மனு.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிரசித்தி பெற்ற திரு சங்கர நாராயண சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள மொட்டை போடும் மண்டபத்தில் 62 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கோவில் நிர்வாகம் இந்த 62 ஊழியர்களில் 30 பேர்களை மட்டும் தேர்வு செய்து வருகிறது.
கோவில் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் 32 ஊழியர்களுக்கு பணி இழப்பு ஏற்படும். கோவில் நிர்வாகத்தின் நடவடிக்கையை கண்டு அதிர்ச்சியுற்ற தொழிலாளர்கள் தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவ பத்மநாதன் சந்தித்து மொட்டை போடும் தொழிலாளர்கள் 62 பேரும் பணியில் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்களது கோரிக்கையை தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவ பத்மநாதன் அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு சேகர்பாபு அவர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கோவில் நிர்வாகத்தின் நடவடிக்கையால் 32 தொழிலாளர்களுக்கு பணி இழப்பு ஏற்படுகிறது. எனவே பணிபுரியும் 62 தொழிலாளர்களும் தங்களது பணியை தொடர வேண்டுமென பரிந்துரை செய்தார்.
இதைத்தொடர்ந்து அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு சேகர்பாபு அவர்கள் 62 பேரும் பணிகளை தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அப்பொழுது மொட்ட மண்டப தொழிலாளர்களிடம் பேசிய மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர பொ.சிவபத்மநாதன் கோவில் ஊழியர்கள் மற்றும் மொட்டை மண்டபத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் என அனைவருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதியார் அவர்களின் நல்லாட்சியில் அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகள் அனைத்தும் முறையாக கிடைக்க உறுதியான நடவடிக்கை எப்பொழுதும் எடுப்போம் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu