புளியரை சோதனைச் சாவடியில் ஓவர் லோடு ஏற்றி வந்த வாகனங்களுக்கு அபராதம்

புளியரை சோதனைச் சாவடியில்  ஓவர் லோடு ஏற்றி வந்த வாகனங்களுக்கு அபராதம்
X

ஓவர் லோடு வாகனம் பைல் படம்

புளியரை சோதனைச் சாவடியில் அனுமதிக்கப் பட்டதை விட அதிக பாரம் ஏற்றி வந்த 10 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம்,கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் வாகனங்களை கண்காணிக்க சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனைச் சாவடி புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தமிழக-கேரள எல்லையான புளியரையில் காவல்துறையினர் 24 மணி நேரமும் சோதனைச் சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சார்பு ஆய்வாளர் முத்து கணேஷ் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவில் ஜல்லி கற்களை ஏற்றி வந்த 10 லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஒவ்வொரு வாகனத்திற்கும் தலா 2000 ரூபாய் வீதம் 20,000 ரூபாயும்,ஒவ்வொரு லாரியிலும் அனுமதிக்கப்பட்டதைவிட அதிக எடை இருந்த வகையில் அதிகமாக உள்ள எடைக்கு 1 கிலோவுக்கு 1 ரூபாய் வீதம் 53970 ரூபாயும் மொத்தமாக 73970 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது..

சார்பு ஆய்வாளரின் இத்தகைய கடும் நடவடிக்கை மூலம் தற்போது புளியரை சோதனைச்சாவடி வழியாக செல்லும் வாகனங்கள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி முறையாக செல்வதாகவும், பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business