லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர்: கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்

லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர்: கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்
X

சங்குபுரம் பஞ்சாயத்தில் வீடு கட்டுவதற்கு 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் முருகையாைவ லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

சங்கரன்கோவில் அருகே சங்குபுரம் பஞ்சாயத்தில் வீடு கட்டுவதற்கு 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது.

சங்கரன்கோவில் அருகே சங்குபுரம் பஞ்சாயத்தில் பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் முருகையா என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து விசாரணை.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சங்குபுரம் பஞ்சாயத்துக்குட்பட்ட பாண்டியன் சாவடி பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவரிடம் ஊராட்சி செயலாளர் முருகையா என்பவர் பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் வீடு வழங்குவதற்கு 20 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக பாண்டி என்பவர் நெல்லை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். காவல் ஆய்வாளர் ராபின்ஞான சிங் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணையை மேற்கொண்டு இரண்டு நாட்களாக ஊராட்சி செயலாளரை நோட்டமிட்டு வந்த நிலையில் இன்று பாண்டி என்பவரிடம் ரசாயனம் தடவிய 20 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஊராட்சி செயலாளரிடம் கொடுக்கும் போது கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்ட பின் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைப்பதற்கு லஞ்ச ஒழிப்புத் துறையினர் அழைத்துச் சென்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!