சங்கரன்கோவில் அருகே விஷம் அருந்திய ஊராட்சி மன்ற தலைவர் உயிரிழப்பு

சங்கரன்கோவில் அருகே விஷம் அருந்திய ஊராட்சி மன்ற தலைவர் உயிரிழப்பு
X

விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட  ஊராட்சி மன்ற தலைவர் ராதா.

சங்கரன்கோவில் அருகே விஷம் அருந்திய ஊராட்சி மன்ற தலைவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

சங்கரன்கோவில் அருகே சங்கு பட்டி ஊராட்சி மன்ற தலைவர் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குருவிகுளம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட சங்குப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வந்தவர் ராதா. இவர் மனைவி மற்றும் குழந்தையுடன் சங்கு பட்டி கிராமத்தில் வசித்து வந்தார்

இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராதா விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக் கண்ட உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு அளித்து பின் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து திருவேங்கடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குடும்ப பிரச்சனை காரணமாக உயிரிழந்தாரா அல்லது கடன் பிரச்சனை காரணமாக அல்லது வேறு ஏதும் காரணங்களுக்காக தற்கொலை முயற்சி மேற்கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

ஊராட்சி மன்ற தலைவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சங்கு பட்டி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story