காந்தி ஜெயந்தி ஓவியப் போட்டி: வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கல்

காந்தி ஜெயந்தி ஓவியப் போட்டி: வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கல்
X

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு,  பசியில்லா அறக்கட்டளை சார்பில் நடந்த  ஓவியப் போட்டியில் சிறப்பான ஓவியம் வரைந்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

காந்தி ஜெயந்தியை, முன்னிட்டு பசியில்லா அறக்கட்டளை சார்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது. சிறப்பான ஓவியங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பசியில்லா அறக்கட்டளை சார்பில், ஓவியப்போட்டி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் மகாத்மா காந்தியின் உருவப்படத்தை பல்வேறு வண்ணங்களில் வரைந்தனர். இதில் சிறப்பான ஓவியங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டியில், முதல் பரிசை சிகோமதிக்கு, அறக்கட்டளை நிறுவனர் ச.பா.சங்கரசுப்பிரமணியன் மற்றும் சிறப்பு அழைப்பாளர் பொதிகை, அர்ஜுன் ஷூ மார்ட் உரிமையாளர் எம். அழகு சுப்பையா, சுரேஷ் ஆகியோர் இணைந்து வழங்கினர். இதேபோல், சங்கரன்கோவிலில் மூன்று நபர்களுக்கும், கோமதிமுத்துப்புரத்தில் 2 நபர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!