சங்கரன்கோவில் குப்பை கிடங்கில் தாெடரும் தீ விபத்தால் பாெதுமக்கள் அவதி

சங்கரன்கோவில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்றாவது முறையாக ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் புகைமூட்டமாய் காணப்பட்டது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நகராட்சியின் சார்பில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தையும் புதிய பேருந்து நிலையத்திற்கு பின்புறம் உள்ள இடத்தில் வைத்து தரம் பிரித்து மறுசுழற்சி செய்து உரமாக மாற்றும் நிலையம் உள்ளது . இந்த குப்பை கிடங்கில் மக்காத குப்பைகள் இருக்கும் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர். இந்த வாரத்தில் மட்டும் மூன்றாவது தடவையாக தீ விபத்து ஏற்படுகிறது. இந்த தீ விபத்தினால் ஏற்பட்ட நச்சுக் கலந்த புகையினால் அப்பகுதிக்கு அருகில் வசிக்கும் மூச்சு விட முடியாமல் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும் சங்கரன்கோவிலில் இருந்து கோவில்பட்டி செல்லும் பிரதான சாலையை இணைக்கும் இணைப்பு சாலையும் இந்த பகுதியின் நடுவே அமைவதால் வாகன ஓட்டிகள் புகை மூட்டத்தால் வாகனங்களை இயக்க முடியாமல் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். நகராட்சி சார்பில் குப்பைகளை தரம் பிரித்து உரமாக்கும் பணியை எடுத்த ஒப்பந்தகாரர் மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்யும் பணத்தை மிச்சப்படுத்துவதற்காக அவ்வப்போது தீ வைப்பதாக அருகில் வசிக்கும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu