விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு 1கோடி வழங்க வேண்டும்: கடம்பூர் ராஜூ கோரிக்கை
விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு தமிழக அரசு உடனடியாக நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறேன். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறேன் என முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேட்டி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள துறையூர் கிராமத்தில் செஞ்சுரி என்ற தனியார் பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையை கோவில்பட்டி ராஜீவ் நகரைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவரது மகன் பிரபாகரன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த ஆலையில் 45 கட்டிடங்கள் உள்ளது. 130 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இன்று வழக்கம்போல் தொழிலாளர்கள் தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று மதியம் பேன்சி ரக பட்டாசுகளுக்கு மருந்து கலவை நிரப்பும் இடத்தில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டு அந்த அறை கட்டிடம் முழுவதுமாக வெடித்து சிதறி தரை மட்டமானது.
இதில் அந்த கட்டிடத்தில் இருந்த ஈராட்சியை சேர்ந்த ராமர் , தொட்டம்பட்டியைச் சேர்ந்த ஜெயராஜ் (47), குமாரபுரத்தைச் சேர்ந்த பொய்யாழிமகன் தங்கவேல் (43), நாலாட்டின்புதூரைச் சேர்ந்த கண்ணன் (48) ஆகிய 4 பேரும் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து கொப்பம்பட்டி காவல்நிலையம் மற்றும் கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு பட்டாசு ஆலை நிர்வாகத்தினர் தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து, ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் அந்த கட்டிட இடிபாட்டில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தினை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ, மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணன், தாசில்தார் அமுதா, மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் குமார், கோவில்பட்டி டிஎஸ்பி உதயசூரியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவில்பட்டி அருகே துறையூரில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 4 தொழிலாளர்கள் பலியான சம்பவம் மிகவும் வருத்தத்திற்குரியது. இப்பகுதியில் இதுவரை இச்சம்பவம் நடந்த அளவில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக இப் பகுதியில் இயங்கி வரும் இந்த தனியார் பட்டாசு ஆலை இம்மாதிரியான சம்பவம் நடைபெற்றது இல்லை அந்த நிலையில் இன்றைக்கு நடைபெற்ற சம்பவத்தில் எதிர்பாராதவிதமாக 4 பேர் உயிரிழந்தனர் இது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இச்சம்பவம் அறிந்தவுடன் நான் மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்து விபத்து குறித்து ஆய்வு செய்தனர் இவ் விபத்தில் பலியான தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் வகையில் தமிழக அரசுக்கு இதனை கொண்டு செல்ல வேண்டுமென்று மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்துள்ளேன். விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு தமிழக அரசு உடனடியாக நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறேன், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறேன். இப்பகுதியில் தீப்பெட்டி தொழிலாளர்கள் பட்டாசு தொழிலாளர்கள் என பாதுகாப்பு இல்லாத அபாயகரமான தொழிலை செய்து வருகிறார் என்று கடந்த அம்மாவின் அரசு பட்டாசு தொழிலாளர்கள் நல வாரியம் அமைத்து ஒரு ஆண்டு காலம் ஆகி உள்ளது இதன் காரணமாக குடும்பத்திற்கு காப்பீடு தொகை நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது இருந்தபோதிலும் உடனடியாக அரசு நிவாரணம் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன் என்று கூறினார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu