சுதந்திரப்போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு தினம் அனுசரிப்பு
சுதந்திரப்போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெல்கட்டும்செவல் பச்சேரி கிராமத்தில் சுதந்திரப்போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவுநாளை முன்னிட்டு பச்சேரி கிராம மக்கள் சார்பாக நினைவு இடத்தில் பால் அபிஷேகம் செய்து மலர்வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தினர்.
கொரோனா ஊரடங்கு அமலில் இருந்து வருவதால் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் சமுதாயத்தலைவர்கள் யாரும் சுதந்திரப்போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு நாள் அனுசரிக்க அனுமதி கிடையாது. இதற்கு சமுதாய அமைப்புகள் அனைவரும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்ளப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது
மேலும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் உட்பட ஆறு மாவட்டங்களை சேர்ந்த நான்கு ஏ.டி.எஸ்.பி., பத்து டிஎஸ்பிக்கள் 30இன்ஸ்பெக்டர்கள், 100எஸ்.ஏ.க்கள், உட்பட 1300போலீசார் 15இடங்களில் சோதனை சாவடி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu