சமத்துவ மக்கள் கட்சியின் பொங்கல் விழாவில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம்

சமத்துவ மக்கள் கட்சியின் பொங்கல் விழாவில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம்
X

சமத்துவ மக்கள் கட்சி சார்பில்  பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கோவில்பட்டி சமத்துவ மக்கள் கட்சி அலுவலத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சமத்துவ மக்கள் கட்சி மாநில பொதுக்குழு அலுவலகத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் முதல்வன் முத்து கணேஷ் தலைமையில் தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் பாரம்பரிய முறையில் பனங்கிழங்கு கரும்பு ஆகியவை வைத்து பொங்கலிட்டு வழிபட்டனர்.

பின்னர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பனங்கிழங்கு கரும்பு மற்றும் பொங்கல் பொங்கி நிறைவைத் தருவது போல் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற முறையில் இலவச நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில்கள் ஆகியவை சுமார் 50 மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நகர மகளிர் அணி செயலாளர் ரதிதேவி, இளைஞரணி செயலாளர் பரணி கணேஷ் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!