புளியங்குடி : அனுமதி இன்றி வனப்பகுதிக்குள் சென்ற 16 பேருக்கு அபராதம்

அனுமதியின்றி மலைக்குச் சென்றவர்களை வனத்துறை கைது செய்தது.
புளியங்குடி அருகே அனுமதி இன்றி வனப்பகுதிக்குள் சென்ற 16 பேரை பிடித்து வனத்துறையினர் 70 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள புளியங்குடி மேற்குதொடர்ச்சி மலை உச்சியில் உள்ள சேம்பூத்துநாத சுவாமி கோவிலுக்கு அனுமதியின்றி சென்று சாமி தரிசனம் செய்து வருவதாக புளியங்குடி வனச்சரகருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற பத்துக்கும் மேற்பட்ட வனத்துறையினர், மலை உச்சியில் இருந்த டி.என்.புதுக்குடியை சேர்ந்த ராஜ்குமார், சிவா, அருண்குமார், அழகுராஜ், குருசாமி, சக்தி, ஆனந்த், தங்கத்துரை உட்பட பதினாறு பேரை கைது செய்தனர். வனஉயிரின பாதுகாப்புச் சட்டம் 1972ன் கீழ் கைது செய்து பதினாறு பேருக்கும் எழுபதாயிரம் அபாரதம் விதித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu