அடிப்படை வசதிகள் இல்லை: காலிகுடங்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை

அடிப்படை வசதிகள் இல்லை: காலிகுடங்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை
X

முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்கள்.

பெரியூர் பஞ்சாத்துகுட்பட்ட கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லாததால் ஆண்கள், பெண்கள் காலிகுடங்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகை.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியூர் பஞ்சாயத்திற்குட்பட்ட சென்பகாபுரம் கிராமத்தில் குடிதண்ணீர், வாறுகால், தெருவிளக்கு உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை வசதிகளும் பத்து வருடங்களாக இல்லை. இது சம்பந்தமாக பலமுறை அதிகரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சென்பகாபுரம் கிராம மக்கள் 200க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் சங்கரன்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்தையை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!