சிவகிரி-சி ஐ டி யு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

சிவகிரி-சி ஐ டி யு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்
X

சி ஐ டி யு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

சிவகிரி பேருந்து நிலையம் முன்பு சி ஐ டி யு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும் சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும்,ஆட்டோ ஓட்டுனர்களுக்குகொரோனா நிதிஉதவியாக ரூபாய் 7500 வழங்க வேண்டியும், நான்கு மாதங்களாக விடாமல் போராடி வரக்கூடிய டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தும், மத்திய அரசு உடனடியாக அழைத்து பேசி 3 வேளாண்மை சட்டங்களையும் வாபஸ் பெற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்டோ சங்கத்தின் பொருளாளர் கே. சக்திவேல் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர் எம்.பி.ரவி எஸ்.கந்தன், போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஜி.அமல்ராஜ், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Next Story
ai solutions for small business