புதிய நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள்: காணொலி மூலம் முதலமைச்சர் திறப்பு

சங்கரன்கோவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நல்வாழ்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் திறந்து வைத்தார்
தமிழக முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக தென்காசி மாவட்டத்தில் புதிய நகர்ப்புற நல்வாழ்வு மையங்களை திறந்து வைத்தார்.
தென்காசி மாவட்டத்தில் அமைக்கப்பட்ட ஐந்து மையங்கள் உட்பட 500 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் தமிழ்நாடு முதல்வர் ,சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அதன்படி, தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட காவிரி நகர் நகர்ப்புற நல்வாழ்வு மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர், மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் காணொலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில் காவேரி நகர், தென்காசி மங்கம்மாள் சாலை, மேல கடையநல்லூர் இந்திரா நகர், முத்துகிருஷ்ணாபுரம், குமராபுரம், மற்றும் புளியங்குடி அய்யாபுரம், ஆகியவற்றில் 1.25 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நல்வாழ்வு மையங்களில் ஒரு மருத்துவர் ஒரு செவிலியர் ஒரு சுகாதார ஆய்வாளர் மற்றும் துணைப்பணியாளர் ஆகியோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 8:00 மணி வரையிலும் செயல்படும்.மேலும் இந்த மையங்களில் அத்தியாவசிய மருத்துவ சேவைகள் பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசி பணிகளும் வழங்கப்படும் நோயாளிகள் மருத்துவர்களை வானொலி மூலம் தொடர்பு கொண்டு சிகிச்சை பெறலாம். எனவே, இந்த மருத்துவ சேவையை பயன்படுத்தும் மக்கள் நலம் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் துரை. ரவிச்சந்திரன், தெரிவித்துள்ளார்.மேலும் நான்கு கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டசத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தென்காசி பாரளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்).முரளி சங்கர், மற்றும் வட்டார மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu