நான்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பு
தென்காசி மாவட்டம் நான்குநேரி வானமாமலை பெருமாள் கோவில் 108 திவ்விய தேசங்களில் ஒன்றானது. சுயம்பு சேஷத்திரங்களில் முதன்மையானதும் ஆகும். மேலும் பக்தர்கள் இந்த கோவிலை பூலோக வைகுந்தம் என்று அழைப்பதுண்டு. இங்கு வருடந்தோரும் வைகுண்ட ஏகாதசி அன்று பரமபத வாசல் என்று அழைக்கப்படும் சொர்க்க வாசல் திறக்கும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடப்பது வழக்கம் ஆகும்.
அதேபோல் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று காலையில் வானமாமலை பெருமாள், ஸ்ரீவரமங்கை தாயார் மடியில் தலைவைத்து சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து மாலையில் சுமார் 6 மணியளவில். வானமாமலை பெருமாள்,ஸ்ரீ வரமங்கைத் தாயார், ஆண்டாள், ஆகியோர் அலங்காரப் பல்லக்கில் எழுந்தருளியபின் பல்லக்கு புறப்பட்டு பரமபத வாசலை வந்ததை தொடர்ந்து. அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
அதன்பின் சொர்க்க வாசல் என்று அழைக்கப்படும் பரமபத வாசல் திறப்பு வைபவம் நடந்தது. கதவு திறக்கப்பட்டபோது எதிரே இருந்த ஆழ்வாா்களுக்கு வானமாமலை பெருமாள் காட்சி அளித்தார் . அதன் பின்னர் அந்த பரமபத வாசல் வழியாக பல்லக்கு வெளிபிரகாரத்திற்கு எழுந்தருளியபின் வானமாமலை பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இந்த நிகழ்ச்சியில் நான்குநேரி மடத்தின் 31வது மடாதிபதியான மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயர் சுவாமி மற்றும் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu