அமமுக சார்பில் முத்துராமலிங்க தேவர் 114 ஜெயந்தி விழா: அய்யாதுரை பாண்டியன் தகவல்..

Ayyadurai Pandian
Ayyadurai Pandian-பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114 வதுஜெயந்தி விழா வரும் அக்.30.ம் தேதி தென்காசி வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சங்கரன்கோவிலில் உள்ள தென்காசி மாவட்ட அமுமுக அலுவலத்தில் வைத்து நடைபெற உள்ளது.
இதுபற்றி தென்காசி வடக்கு மாவட்ட அமமுக செயலாளர்டாக்டர் ச.அய்யாத்துரை பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வரும் 30.10.2021 ம். தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 114 வது, ஜெயந்தி விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட அமமுக அலுவலகத்தில் முத்துராமலிங்க தேவர் திருவுருவப் படத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட அமமுக செயலாளர் டாக்டர் அய்யாத்துரை பாண்டியன் தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் படுகிறது.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளரும் தென்மண்டல பொறுப்பாளருமான மாணிக்கராஜா ஆலோசனையின் பேரில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு சங்கரன்கோவிலில் வரும் முப்பதாம் தேதி காலை ஒன்பது மணிக்கு தென்காசி வடக்கு மாவட்ட அமுமுக அலுவலகத்தில் வைத்து முத்துராமலிங்க தேவரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்விழி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில , மாவட்ட கழக நிர்வாகிகள் , மாவட்ட சார்பு அணிச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் , பொதுக்குழு உறுப்பினர்கள், பேரூர் செயலாளர்கள், வார்டு செயலாளர்கள், ஊராட்சி மற்றும் கிளை செயலாளர்கள், உறுப்பினர்கள் விழாவினை சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு தென்காசி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் டாக்டர் ச.அய்யாத்துரை பாண்டியன் தெரிவித்துள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu