மருத்துவமனைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய நகராட்சி ஊழியர்கள்

மருத்துவமனைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய நகராட்சி ஊழியர்கள்
X

நகராட்சி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள். 

சங்கரன்கோவிலில் கை குழந்தையுடன் மருத்துவமனைக்கு செல்லும் நபர்களை நிறுத்தி கட்டாயமாக அபராதம் விதிக்கும் நகராட்சி ஊழியர்கள்.

தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் பொதுமக்கள் வெளியே வரலாம் என்று தமிக அரசு அறிவித்துள்ள நிலையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கைக்குழந்தைகளுடன் மருத்துவமனைக்கு செல்பவர்கள், வயதான முதியவர்கள் உட்பட அவசர தேவைகளுக்கு இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களை நகராட்சி ஊழியர்கள் வழிமறித்து கட்டாயப்படுத்தி அபராதம் விதித்தால் பொதுமக்கள் நகராட்சி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

மருத்துவமனைக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நகராட்சி ஊழியர்கள் நிறுத்தியதால் அவரால் நிற்க கூட முடியாமல் சாலையில் அருகே மயக்க நிலையில் அமர்ந்த சம்பவமும் நடந்தது. மேலும் நகராட்சி ஊழியர்களுக்கு தெரிந்தவர்கள் வாகனத்தில் வருபவர்களின் வாகனங்களை நிறுத்தக்கூடாமல் ஒருதலை பட்சமாக செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்