மலைபோல் மருத்துவக் கழிவுகள்; 4 நாட்களாகியும் நடவடிக்கை எடுக்காத எம்எல்ஏ

மலைபோல் மருத்துவக் கழிவுகள்; 4 நாட்களாகியும் நடவடிக்கை எடுக்காத எம்எல்ஏ
X

வடக்குப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் மலைபோல் கொட்டப்பட்டுள்ள மருத்துவக்கழிகள். 

சங்கரன்கோவில் அருகே மலை போல் குவிந்துள்ள கேரள மருத்துவக் கழிவுகளை 4 நாட்களாகியும் அகற்றாததால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் மர்ம நபர்கள் லாரிகள் மூலம் கேரளா மருத்துவ, இறைச்சி, பிளாஸ்டிக் கழிவுகளை மலைபோல் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் கொட்டி சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதால் தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளதாக கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சங்கரன்கோவில் வட்டாரவளர்ச்சி அலுவலர் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்ட அனைத்துதுறை சார்ந்த அதிகாரிகளிடம் கிராம மக்கள் கேரளா கழிவுகள் சம்பந்தமாக புகார் அளித்திருந்தனர். புகாரளித்து நான்கு நாட்களுக்கு மேலாகியும் நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது போன்ற கேரளா கழிவுகளை சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கொட்டி வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. எனவே வடக்குப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே உள்ள கேரளா கழிவுகளை அகற்றி மெத்தனமாக செயல்பட்டு வரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இருமன்குளம், வடக்குப்புதூர் ஆகிய கிராம மக்களின் கோரிக்கையாகும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!