பழுதடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பழுதடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
X

சங்கரன்கோவில் அருகே உள்ள புளியங்குடியில் இருந்து திருமங்கலம் முதல் கொல்லம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலை.

சங்கரன்கோவில் அருகே பள்ளங்கள் நிறைந்த தேசிய நெடுஞ்சாலையால் வாகன ஓட்டிகள் அவதி. சாலையை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை.

சங்கரன்கோவில் அருகே தண்ணீர் தேங்கி மிக ஆழமான பள்ளங்கள் நிறைந்த தேசிய நெடுஞ்சாலையால் வாகன ஓட்டிகள் அவதி. சாலையை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள புளியங்குடியில் இருந்து திருமங்கலம் முதல் கொல்லம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சிந்தாமணி டோல் கேட் அருகே உள்ள குளத்தில் இருந்து நீர் கசிந்து சாலைகளில் தேங்கியுள்ளதால் சாலைகள் அனைத்தும் ஆழமான பள்ளங்கள், குழிகள் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து செல்லும் அளவிற்கு கடந்த இரண்டு மாதங்களாக உள்ளது. அதனால் அவ்வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்..

மேலும் இந்த சாலையில் நள்ளிரவில் அதிக விபத்து ஏற்பட்டு மரணங்கள் தொடர்கதையாகிறது. இது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறையினரிடம் பல முறை சாலையை சீரமைக்க கோரி புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே தமிழக அரசு குண்டும், குளியுமாக காணப்படும் தேசிய நெடுஞசாலையை உடனடியாக சரி செய்து விபத்து ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Tags

Next Story
ai marketing future