சங்கரன்கோவில் அருகே காணாமல் போன மூதாட்டி குளக்கரையில் சடலமாக மீட்பு

சங்கரன்கோவில் அருகே காணாமல் போன மூதாட்டி குளக்கரையில் சடலமாக மீட்பு
X

சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி புஷ்பம்.

சங்கரன்கோவில் அருகே காணாமல் போன மூதாட்டி குளக்கரையில் சடலமாக மீட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள கோ.மருதப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மனைவி புஷ்பம் (80). புஷ்பம் கடந்த 20 நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக சின்ன கோவிலா குளம் காவல் நிலையத்தில் அவரது மகன் புகார் அளித்திருந்தார்.

கடந்த 20 நாட்களாக காணாமல் போனவரை தேடி வந்த நிலையில், இன்று சங்கரன்கோவில் அருகே உள்ள மலையாங்குளம் குளக்கரையில் பெண் சடலம் கிடப்பதாக குருவிகுளம் காவல்துறைனருக்கு தகவல் கிடைத்ததையடுத்து அங்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டனர்.

பின்பு சுற்று பகுதியில் காணாமல் போனதாக உள்ளபட்டியலை எடுத்து விசாரணை செய்ததனர். இதில் புஷ்பத்தின் மகனிடம் தெரியபபடுதினர். அவர் அடையாளம் காட்டியதையடுத்து இறந்திருப்பது புஸ்பம் தான் எனவும், குளக்கரையில் நடந்து சென்றபோது கரையில் இருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதனை எடுத்துக் குருவிகுளம் காவல்துறையினர் உடலின் மாதிரிகளை மரபணு சோதனைக்காக நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!