வீதி வீதியாக சென்று அமைச்சர் வாக்கு சேகரிப்பு

வீதி வீதியாக சென்று அமைச்சர் வாக்கு சேகரிப்பு
X

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர் பகுதிகளில் அமைச்சர் ராஜலட்சுமி வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி பகுதிகளில் உள்ள வார்டுகளில் சட்டமன்ற தொகுதி வேட்பாளரும் அமைச்சருமான ராஜலட்சுமி கச்சேரி சாலை,ஓடைதெரு, திரு விக தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் அதிமுக தலைமையிலான அரசு அமைய பொது மக்கள் ஆதரவு தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story
ai jobs loss