சங்கரன்கோவில் அருகே மின்கம்பத்தில் மோதிய மினி பஸ்: இருவர் படுகாயம்

சங்கரன்கோவில் அருகே  மின்கம்பத்தில்  மோதிய மினி பஸ்: இருவர் படுகாயம்
X

சாலையோர மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான மின பேருந்து.

சங்கரன்கோவில் அருகே மினி பேருந்து சாலையோர மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் படுகாயமடைந்தனர்.

தென்காசி மாவட்டம், சுரண்டையில் இருந்து சேர்ந்தமரம் வழயாக கள்ளம்புளி என்ற கிராமத்திற்கு மினி பேருந்து ஆட்களை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த மினி பேருந்து சாலையோரம் நின்றிருந்த மின்கம்பத்தின் மீது மோதியது. இதில் பேருந்தில் பயணம் செய்த இரண்டு பேர் படுகாயங்களுடன் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் விபத்து குறித்து சேர்ந்தமரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!