/* */

கோவில்பட்டி ஒன்றிய கூட்டத்தில் உறுப்பினர்கள் வெளிநடப்பு

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட 11 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

HIGHLIGHTS

கோவில்பட்டி ஒன்றிய கூட்டத்தில் உறுப்பினர்கள் வெளிநடப்பு
X

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய சாதாரண கூட்டம் நடந்தது. ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் தலைமையில் வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்புலட்சுமி, சீனிவாசன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மொத்தம் உள்ள 19 உறுப்பினர்களில் திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த 17 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியவுடன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் பேசுகையில், தற்போது ஒப்பந்ததாரர்கள் 56 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கே பணி சரியாக வழங்க முடியவில்லை. தற்போது இன்னும் 10 முதல் 15 பேர் வரை புதிதாக பதிவு செய்ய விண்ணப்பம் வழங்கி உள்ளனர். இவர்களையும் இணைத்தால் 71 பேர் வரை ஒப்பந்ததாரர்கள் எண்ணிக்கை உயர்ந்துவிடும். இவர்கள் அனைவருக்கும் பணி கொடுக்க இயலாது. எனவே, குறைந்தது 6 மாதங்கள் வரை யாரையும் ஒப்பந்ததாரராக பதிவு செய்ய தடை விதிக்க மன்றம் அங்கீகரிக்க வேண்டும் என்றார்.

அப்போது உறுப்பினர்கள் புதிதாக விண்ணப்பத்தவர்களில் குறிப்பிட்ட 2 பேரின் மனுக்களை ஏற்று, அவர்களை ஒப்பந்ததாரராக பதிவு செய்ய வேண்டும் என்றனர். அதற்கு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மறுக்கவே, திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளை சேர்ந்த 11 பேர் வெளிநடப்பு செய்தனர். மீதமுள்ள 6 பேர் வருகைபதிவேட்டில் கையெழுத்திட்டனர். போதிய உறுப்பினர்கள் இல்லாததால் தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படாமல் கூட்டம் பாதியிலேயே முடிவடைந்தது.

Updated On: 11 March 2022 1:38 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  2. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  4. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  5. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  6. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  9. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  10. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...